கலவரமாகும் அக்னிபத் , தீக்கிரையாக்கப்படும் ரயில்கள் : நாடு முழுவதும் ரயில் சேவைகள் பாதிப்பு

By Irumporai Jun 17, 2022 08:37 AM GMT
Report

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வலுத்து உள்ளதால், 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 35 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வெடிக்கும் அக்னிபத் திட்டம்

அக்னிபத் திட்டத்தின் போது   இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளிலும் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் வகையில், தற்காலிக ஆட்சேர்ப்புக்கான அக்னிபாத் எனும் புதிய திட்டம் அறிமுகம் செய்தது.

கலவரமாகும் அக்னிபத்  , தீக்கிரையாக்கப்படும் ரயில்கள் : நாடு முழுவதும்  ரயில் சேவைகள் பாதிப்பு | Trains On Fire 200 Train Across The Country

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பீகார், உத்தரப்பிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த 3 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இளைஞர்கள், சாலைகளில் டயர்களை எரிப்பது, ரயில் தண்டவாளங்களில் வாகனங்களை எரிப்பது என வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத்தொடர்ந்து ஆங்காங்கே ரயில்கள் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டு வருகின்றன.  

எரிக்கப்படும் ரயில்கள்

இந்த நிலையில் நேற்றைய தினம் பீஹார் மாநிலத்தில் ஒரு பயணிகள் ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட நிலையின் இன்று மீண்டும் ஒரு ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உத்தரப்பிரதேசத்திலும் ரயில்நிலையம் சூறையாடப்பட்டு , ரயில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

கலவரமாகும் அக்னிபத்  , தீக்கிரையாக்கப்படும் ரயில்கள் : நாடு முழுவதும்  ரயில் சேவைகள் பாதிப்பு | Trains On Fire 200 Train Across The Country

 அக்னிபாத் எதிர்ப்புப் போராட்டத்தால் நாடு முழுவதும் 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 35 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 13 ரயில் சேவைகள் விடை கிடைக்க நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.