ஆகம விதிப்படி பயிற்சி பெற்றவர்களே அர்ச்சகராக முடியும்- அமைச்சர் சேகர் பாபு!

ஆகம விதிப்படி பயிற்சி பெற்றவர்களே கோவில்களில் அர்ச்சகராக முடியும் என இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

சீர்காழி அருகே திருவெண்காடு பகுதியில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி கட்டடங்களை இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

அங்கு பாழடைந்து போன பள்ளிகளை சீரமைக்கவும் மாணவ மாணவியர்களை அதிகமாக சேர்க்க அதிகாரிகளிடையே ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, கோவில் நிலங்களுக்கு வாடகை செலுத்தாமல் யார் அனுபவித்துக் கொண்டிருந்தாலும் உரிய வாடகை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என கூறினார்

மேலும்,  கோவில்களில்ஆகம விதிப்படி பயிற்சி பெற்றவர்களே கோவில்களில் அர்ச்சகராக முடியும்" என தெரிவித்தார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்