ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ரிக்ஷாக்காரர் - ஒரு நொடியில் உயிர் தப்பிய அதிசயம்... - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Uttar Pradesh Accident
By Nandhini Sep 12, 2022 11:01 AM GMT
Report

உ.பி.யில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ரிக்ஷாக்காரர் ஒரு நொடியில் உயிர் தப்பிய அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. 

உயிர் தப்பிய ரிக்ஷாக்காரர்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், உத்திரபிரதேசம், அலிகார் பகுதியில் ஒரு ரிக்ஷாக்காரர் ரயில் தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்தார். அப்போது, கவுகாத்தியிலிருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த ரயில் ஒன்று மின்னல் வேகத்தில் ரிக்ஷா மீது மோதி பறந்தது. இந்த விபத்தில் ஒரு நொடியில் ரிக்ஷாக்காரர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்தில் அவருடைய ரிக்ஷா சுக்குநூறாக உடைந்து போனது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், அந்த ரிக்ஷக்காரரை பிடித்து ஆர்பிஎஃப் காவலில் வைத்துள்ளனர். 

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.  

viral video