ஓடும் ரயிலில் ஏறி பெண்ணின் செயினை பறித்த திருடன் - ஒரு நொடியில் உயிர் தப்பிய அதிர்ச்சி வீடியோ...!

Viral Video
By Nandhini Dec 30, 2022 06:14 AM GMT
Report

ஓடும் ரயிலில் ஏறி பெண்ணின் செயினை பறித்த திருடனின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செயின் பறித்த திருடன் - ஒரு நொடியில் உயிர் தப்பிய பெண்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ரயில் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

அப்போது, ஓடும் ரயிலில் ஏறிய ஒரு நபர் திடீரென ரயில் முன்வாசலில் நின்றுக்கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்து செயினை பறித்து ஓடினான். அப்போது, அப்பெண் நிலைத்தடுமாறி கீழே விழப்பார்த்தார். நள்ளவேளையாக ரயிலில் இருந்த பயணிகள் அப்பெண்ணின் உயிரை காப்பாற்றினர்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், ரயில் நிற்கும் முன் வாசலுக்கு வர வேண்டாம். இல்லையெனில், இதுபோன்ற சம்பவத்திற்கு நீங்களும் பலியாகலாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

train-thief-snatched-woman-chain