தமிழ்நாட்டில் பயணிகள் வருகை குறைவால் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் நாளை முதல் இயக்கம்

Train Tamilnadu Egmore
By Thahir Jun 19, 2021 11:32 AM GMT
Report

தமிழ்நாட்டில் பயணிகள் வருகை குறைவால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டருந்த 10 சிறப்பு ரயில்களின் சேவை நாளை முதல் தொடங்க உள்ளது.

சென்னை எழும்பூரிலிருந்து தஞ்சாவூர், கொல்லம், ராமேஸ்வரம், திருச்சி செல்லும் 4 சிறப்பு ரயில்கள் நாளை முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளன. இதேபோல், சென்னை சென்ட்ரலிலிருந்து திருவனந்தபுரம், ஆலப்புழா, மேட்டுப்பாளையம் செல்லும் 3 சிறப்பு ரயில்களும் நாளை புறப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் பயணிகள் வருகை குறைவால் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் நாளை முதல் இயக்கம் | Train Tamilnadu Egmore

மேலும், கோவையிலிருந்து நாகர்கோவில், மதுரையில் இருந்து புனலூர் செல்லும் சிறப்பு ரயில்களும், திருவனந்தபுரத்திலிருந்து மதுரை செல்லும் சிறப்பு ரயிலும் நாளை முதல் இயக்கப்பட உள்ளன.