ஏ எப்புட்றா?..Traffic Jam'இல் சிக்கி தவித்த Train..இணையத்தில் வைரலாகும் வீடியோ

Uttar Pradesh India Train Crowd
By Karthick Aug 14, 2023 09:11 AM GMT
Report

வடஇந்தியாவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ரயில் ஒன்று ஹாரன் அடித்து நின்ற காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Traffic Jam

இந்தியாவின் மிக பெரிய பிரச்சனைகளில் ஒன்று Traffic Jam. இன்னும் எவ்வளவு மேம்பாலங்களும், சாலைகளை விரிவாக்கம் செய்தாலும், இந்த பிரச்சனைக்கு ஒரு வழி கண்டறிய முடியாமல் அரசும் தவித்து வருகின்றது. மக்கள் பலரும் பல்வேறு வகையிலான Traffic Jam'ஐ பார்த்திருப்போம். ஆனால் train ஒன்று Traffic Jam'இல் சிக்கிய சம்பவம் தற்போது நடந்து வைரலாகி வருகின்றது.

train-stuck-in-traffic-jam

தவித்த ரயில்   

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங்கில் போக்குவரத்து நெரிசல் காரணமாக எக்ஸ்பிரஸ் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் பனாரஸில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ரயில் நிறுத்தப்பட்டதால், போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை சீர் செய்ய முடியாமல் திணறுவது இந்த வீடியோ காட்டுகிறது.