ரயிலுக்காக பிளாட்பார்மில் காத்திருந்தவருக்கு விழுந்த பளார் அறை - வைரலாகும் வீடியோ
ரயிலுக்காக பிளாட்பார்மில் காத்திருந்தவருக்கு விழுந்த பளார் என அறை விழுந்த வீடியோ இணைத்தில் வைரலாகி வருகிறது.
சங்கரி என்பவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் ரயிலில் பயணம் செய்ய பிளாட்பார்மில் இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். அப்போது வாசல் வரை கூட்டத்தொடு ரயில் வருகிறது.
அப்போது வாசலில் தொங்கிக்கொண்டிருக்கும் நபர் ஒருவர் இளைஞரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டுச் செல்கின்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவை பார்க்கும் போது நடிகர் வடிவேலுவின் பிரபலமான வசனமான “நான் பாட்டுக்கு சிவனேன்னு தான இருந்தேன்” என்ற வரிகள் தான் நியாபகத்திற்கு வருகிறது என இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
நான் பாட்டுக்கு சிவனேனு தான்டா இருந்தேன்☺️ pic.twitter.com/YOe4xqsirT
— Sankari_ ?Bird (@Shankari_offici) October 24, 2021