புயலால் ஸ்தம்பித்த சென்னை நாள் முழுவதும் ரயில் சேவை ரத்து - விமான சேவைகளும் ரத்து!!

Chennai TN Weather Weather
By Karthick Dec 04, 2023 03:42 AM GMT
Report

மிக்ஜாம் புயல் சென்னையை நெருங்கி வரும் நிலையில், கனமழை காரணமாக சென்னையின் 14 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை

மிக்ஜாம் புயலின் காரணாமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது தொடர் கனமழை பெய்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, சென்னையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ள புயல் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததுள்ளது.

train-flight-transport-stopped-in-chennai-in-rains

சூறைக்காற்று வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளதால், அத்தியாவசிய தேவைகளின்றி பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புயலின் தீவிரத்தின் காரணமாக பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்தம்பித்த சென்னை

கனமழை பெய்யக்கூடும் என்ற காரணத்தால், சென்னையிலுள்ள 14 சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளன. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதி மின்சார ரயில் சேவை இன்று நாள் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

அங்கங்கே ரயில்கள் பாதுகாப்பு கருதப்பட்டு நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், விமான சேவைகளும் ரத்தாகி இருக்கின்றது. சென்னை நோக்கி வரும் பல விமானங்கள் பெங்களூருடன் திருப்பி அனுப்படுவதாகவும், சென்னையில் இருந்து புறப்படும் 20 விமான சேவைகளை மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது.

train-flight-transport-stopped-in-chennai-in-rains

சென்னை மற்றும் புறநகர் பேருந்து சேவைகளும் பெரும் இன்னலை சந்தித்துள்ள நிலையில், சென்னை நகரம் இந்த அதிகன மழையால் ஸ்தம்பித்துள்ளது.