மங்களூர் விரைவு ரயில் என்ஜின் பழுது...இரண்டரை மணி நேரமாக பரிதவித்த பயணிகள்
சென்னையில் இருந்து மங்களூர் வரை செல்லும் மங்களூர் விரைவு ரயிலின் என்ஜின் பழுதால் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் பரிதவித்தனர்.
சென்னையில் இருந்து நேற்று இரவு 11.15 மணிக்கு புறப்பட்டது மங்களூர் விரைவு ரயில்.
இந்த ரயில் திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், பாலக்காடு வழியாக மங்களூர் வரை செல்கிறது.

இதில் சுமார் 800க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த ரயில் மேல்மருவத்தூர் அருகே கருங்குழி ரயில் நிலையம் அருகே சென்ற போது என்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ரயில் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டது. பின்னர் விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு ரயிலில் இணைத்த பின் ரயில் புறப்பட்டு சென்றது.
சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.