பீகாரில் ரயில் தடம் புரண்டு விபத்து - 4 பேர் உயிரிழப்பு 100 பேர் காயம்..!
பீகார் மாநிலத்தில் புதன்கிழமை விரைவு ரயில் ஒன்று தடம்புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்; சுமால் 100 பேர் காயம் அடைந்தனர்.
ரயில் தடம் புரண்டு விபத்து
டெல்லியில் இருந்து அசாமுக்குச் சென்றுகொண்டிருந்த வடக்கு-கிழக்கு எக்ஸ்பிரஸ் ரயிலின் 21 பெட்டிகள், பீகாரின் புக்ஸார் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு 9.35 மணியளவில் தடம்புரண்டதாக ஈஸ்ட் சென்ட்ரல் ரயில்வேயின் பொது மேலாளர் தருன் பிரகாஷ் ராய்ட்டர்சிடம் கூறினார்.
காயம் அடைந்த 100 பேரில் சிலர் பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார். ரயில் தடம்புரண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
அசாம் முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த விபத்தை அரசாங்கம் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தது.
கடந்த ஜூன் மாதம், ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த மோசமான ரயில் விபத்தில் குறைந்தது 288 பேர் உயிரிழந்தனர்.