ரயில் தடம் புரண்டு கோர விபத்து- 4 பேர் பரிதாப பலி!

By Sumathi Jun 04, 2022 07:25 AM GMT
Report

ஜெர்மனியில் பவேரியாவில் பிராந்திய பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழப்பு, 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கார்மிஷ்- பார்டென்கிர்சென் என்ற ரிசார்ட் நகரத்திற்கு வெளியே இந்த ரயில் புறப்பட்டுள்ளது. தெற்கு ஜெர்மனியில் ஆல்ப்ஸ் மலையில் அதிகளவிலான மாணவர்களுடன் முனிச் நோக்கிச் சென்ற பிராந்திய ரயில் பர்கிரேனில் சிறிது நேரத்திற்குப் பிறகு தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது.

ரயில் தடம் புரண்டு கோர விபத்து- 4 பேர் பரிதாப பலி! | Train Accident With Large Students 4 Killed

இந்த விபத்தில் இரண்டு டபுள்-டெக் ரயில் பெட்டிகள் கவிழ்ந்தன. மக்கள் பாதுகாப்பாக ஜன்னல்களுக்கு வெளியே இழுக்கப்பட்டு, மீட்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த கோர விபத்தில் சுமார் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் 15 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தின் போது சுமார் 140 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதில், குறிப்பாக அதிகளவில் மாணவர்கள் இருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.