விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து - 3 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற விரைவு ரயில் மேற்கு வாங்க மாநிலத்தில் தடம் புரண்டு விபத்திற்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவுஹாத்தி-பிகானர் விரைவு ரயில் இன்று மாலை 5 மணி அளவில் மேற்கு வங்கத்தின் தோமோஹானி அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் சுமார் 4 பெட்டிகள் தடம் புறண்டுள்ளன. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

தொடர்ந்து, விபத்து குறித்த வெளியாகியுள்ள வீடியோக்கள், புகைப்படங்கள் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் சேதமடைந்த ரயில் பெட்டிகளின் இடிபாடுகளில் இருந்து மக்கள் மீட்கப்படுகின்றனர். சம்பவ இடத்தில் போலீசாருடன் உள்ளூர் மக்களும், பிற பயணிகளும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்