பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மோதிய விபத்தில் 30 பேர் பலி
பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மோதிய விபத்தில் 30 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் தார்கி நகரின் அருகே தடம்புரண்டு நின்றிருந்த மில்லத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது, சர் சையத் எக்ஸ்பிரஸ் ரெயில் பயங்கரமாக மோதியது. இதில் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் சேதமடைந்து கவிழ்ந்தன.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் ரயில் விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்ததாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து பற்றி கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடைந்த பிரதமர் இம்ரான் கான், ரெயில்வே மந்திரியை உடனே அந்த பகுதிக்கு சென்று தேவையான உதவிகளை செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.