காலையில் சென்னையில் தடம் புரண்ட புறநகர் ரயில்!! பொதுமக்கள் தவிப்பு!!
சென்னை புறநகர் பகுதியில் இன்று காலை புறநகர் ரயில் ஒன்று தடம்புரண்டதால் ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
சென்னை புறநகர் ரயில்
பெரும்பாலும் சென்னையில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்னை புறநகர் பகுதிகளிலேயே வசிக்கின்றனர். அவர்களில் அதிகப்படியான மக்கள் வீட்டில் இருந்தும் வேலைக்கு வந்து செல்வதற்கு பயனப்டுத்துவது ரயில் போக்குவரத்தே.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் வரை அதிகப்படியான ரயில்களும் இதன் காரணமாக இயக்கப்படுகின்றது. இந்த போக்குவரத்தில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும், மக்களின் பயணம் பெருமளவில் தடைப்பட்டு போகிறது.
தடம் புரண்ட ரயில்
இன்று அதிகாலை சென்னையை அடுத்த ஆவடியில் ரயில் ஒன்று தண்டவாளத்தில் இருந்து தடம் புறண்டுள்ளது. ரயிலின் 4 பேட்டிகள் தடம் புரண்ட நிலையில், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மற்றும் மருமார்கமான அரக்கோணம் - சென்னை சென்ட்ரல் செல்லும் அநேக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
தடம் புரண்ட ரயில் SHED'இல் இருந்து புறப்பட்டதால் நல்வாய்ப்பாக இந்த விபத்தின் மூலம் எந்த வித உயிர்சேதமும் நிகழவில்லை. தற்போது ரயில்வே துறையினர் ரயிலை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.