ஓடும் ரயிலை பிடிக்கும் முயற்சியில் தவறி விழுந்த 2 பெண்கள் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...!
மகாராஷ்டிராவில் ஓடும் ரயிலை பிடிக்கும் முயற்சியில் 2 பெண்கள் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவறி விழுந்த 2 பெண்கள்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மும்பை, மகாராஷ்டிரா, வசாய் ரயில் நிலையத்தில் 2 பெண்கள் ஓடும் ரயிலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென பெண் பயணிகள் இருவரும் நடைமேடையில் தவறி விழுந்தனர்.
உடனே அங்கிருந்தவர்கள் அப்பெண்களின் உயிரை காப்பாற்றினர். தற்போது இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்தனர். அந்த 2 பெண்களின் உயிரை காப்பாற்றியவர்களுக்கு பாராட்டு தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
