கண்ணீரில் நடிகை நித்யா மேனன்...வீட்டில் நடத்த துயர நிகழ்வு - ரசிகர்கள் ஆறுதல்
நடிகை நித்யா மேனன் தனது தாய் வழி பாட்டி இறப்பால் குடும்பமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கண்ணீரில் நித்யா மேனன்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான நித்யா மேனன் தனது வீட்டில் நடந்த சோகமான நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலம் அடைந்தவர் நித்யா மேனன். இதை தொடர்ந்து தனுஷுடன் அவர் நடித்த திருச்சிற்றம்பலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது.
கேரளாவை பூர்விகமாக கொண்ட அவர் தென்னிந்திய சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை நித்யா மேனன் தனது தாய் வழி பாட்டி மறைவை அடுத்து அவர் சோகத்தில் உள்ளார்.
ரசிகர்கள் ஆறுதல்
இது குறிதது நித்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாத்தா மற்றும் பாட்டியின் புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார். அதில் ஒரு சகாப்தம் முடிந்து விட்டது.
அம்மம்மா மற்றும் என் தாத்தாவை பிரிந்துவிட்டேன். அவர்களை வேறொரு உலகில் பார்ப்பேன் என்று கூறியுள்ளார்.
இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். பல பேட்டிகளில் நித்யா மேனன், தனக்கும் தாத்தா பாட்டிக்கும் இடையிலான உறவு குறித்து உணர்ச்சிகரமாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.