தினகரனால் அதிமுக தோற்கும்: டிராபிக் ராமசாமி கருத்து
தமிழகத்தில் திமுக வெல்லவே அதிக வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வர உள்ள நிலையில் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும் நடத்தப்பட்டு அறிவிப்புகள் வெளியாகின்றன.
கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணியே வெல்லும் என கூறியுள்ளது.இந்த நிலையில் சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமியும் அதே கருத்தை கூறியுள்ளார்.

இது சம்மந்தமாக தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் நான் செல்லும் இடமெல்லாம் திமுக ஆதரவு மனப்பாண்மையை பார்க்கிறேன். தினகரனால் அதிமுக தோற்கும் எனக் கூறியுள்ளார்.
சமீபத்தில் அவர் சிறையில் இருந்து வெளியே வந்த அமமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலாவை சென்று சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.