டிராபிக் ராமசாமியின் மறைவுக்கு நடிகர் சூரி இரங்கல்

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் மறைவுக்கு நகைச்சுவை நடிகர் சூரி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் தலைவர்களுக்கும்,ஊழல் செய்த அரசு அதிகாரிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் டிராபிக் ராமசாமி. 87 வயதான ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 20ம் தேதி சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் நடிகர் சூரி அவர் மறைவிற்கு ட்விட்டரில் இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது, "சமுதாயத்தின் மீது அக்கறையும், நீதித்துறையின் மீது நம்பிக்கையும் கொண்டு சமுதாயத்தில் நிகழும் தவறான செயல்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவரின் குரல் ஓய்ந்துவிட்டது என்ற செய்தி வருத்தமளிக்கிறது. அவரது ஆத்மா இறைவனடி சேர பிராத்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.    

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்