நீங்களே இப்படி செய்யலாமா? திண்டுக்கல் லியோனிக்கு அபராதம் விதித்த போலீசார்..!

DMK Chennai Tamil Nadu Police
By Thahir May 23, 2023 10:26 AM GMT
Report

பிரபல பேச்சாளரும் தமிழ்நாடு பாடநுால் கழக தலைவருமான லியோனிக்கு சென்னை போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

சமூக வலைத்தளம் மூலம் புகார் 

சென்னை போக்குவரத்து காவல்துறை மோட்டார் வாகன விதிகளை பின்பற்றுமாறு வாகன ஓட்டிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து காவல்துறைக்கு சமூக வலைதளங்கள் மூலம் அதிக அளவில் புகார்கள் வருவதாக கூறப்படுகிறது.

அவ்வாறு வரும் புகார்களை உரிய விசாரணை செய்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடியாக அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

traffic-police-fined-dindigul-i-leoni

அந்த வகையில், நேற்று முன்தினம் ஆலந்துார் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வெள்ளை நிற சொகுசு கார் ஒன்று தமிழ்நாடு அரசு இலட்சினை பொருத்தி சென்றுள்ளது.

அந்த காரில் கருப்பு ஸ்டிக்கர் அடர்த்தியாக ஒட்டப்பட்டு பம்பர் பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாகன எண் பலகை சரியாக இல்லை என கூறி ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு புகார் அளித்திருந்தார்.

லியோனிக்கு அபராதம் விதித்த போலீசார் 

அதனை சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்த சென்னை போக்குவரத்து போலீசார் அந்த காருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி, கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதற்காக 500 ரூபாயும், வாகன எண் பலகை முறையாக இல்லாததால் 1500 ரூபாயும், பம்பர் பொருத்தப்பட்டதற்காக 500 ரூபாயும் என மொத்தம் 2500 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கான ரசீதை புகார் அளித்தவருக்கு போக்குவரத்து காவல்துறையினர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

traffic-police-fined-dindigul-i-leoni

அந்த கார் தமிழ்நாடு பாடநுால் கழக தலைவர் திண்டுக்கல் லியோனிக்கு சொந்தமானது எனவும், அவர் அரசு பதவியில் இருப்பதால் தமிழக அரசின் இலட்சினை தனது சொந்த காரில் பொறுத்தி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.