நான் போலீஸ் இல்ல பொறுக்கி..சாலையில் அரை நிர்வாணமாக நின்று தகராறு செய்த டிராபிக் போலீஸ்
சென்னை அம்பத்தூரில் போக்குவரத்து காவலர் ஒருவர் நிர்வாணமாக சண்டை போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரகடம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (48) கோயம்பேடு போக்குவரத்து பிரிவு தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரரான காய்கறி வியாபாரம் செய்து வரும் முருகன்(40) என்பவருக்கும் இரு சக்கர வாகனத்தை வீட்டின் ஓரம் நிறுத்துவதில் பிரச்னை இருந்துள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணகுமார் மது போதையில் முருகனிடம் இரு சக்கர வாகனத்தை நிறுத்தக்கூடாது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் முருகனின் இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்து கீழே தள்ளி உள்ளார். இதனையடுத்து முருகன் அங்கிருந்து கடைக்கு சென்றுவிட்டார்.
ஆனாலும் ஆத்திரம் தீராத கிருஷ்ணகுமார் குடிபோதையில் முருகன் வீட்டுக்கு சென்று குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து தனது அரைக்கால் சட்டையை கழற்றி தெருவில் நிர்வாணமாக நின்றார். இது குறித்து முருகன் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
ஆனால், புகாரை பெற்று கொண்ட போலீசார் நேற்று இரவு வரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து, முருகன் அம்பத்தூரில் உள்ள மேற்கு மண்டல இணை கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.
போக்குவரத்து காவலர் கிருஷ்ணகுமார் குடிபோதையில் செய்த அட்டகாசங்கள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.