தொடர் விடுமுறையால் சென்னையில் போக்குவரத்து நெரிசல்!
தொடர் விடுமுறையை அடுத்து சென்னையில் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தொடர் விடுமுறை - போக்குவரத்து நெரிசல்
சனி, ஞாயிறு மற்றும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் சென்னையிலிருந்து பலரும் சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்குச் சிறப்புப் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் சொந்த ஊருக்குப் படையெடுத்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் அதிக நெரிசல் காணப்படுகிறது. ஜிஎஸ்டி சாலை மற்றும் பெருங்களத்தூர் பகுதியில் மிதமான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டாலும், இன்னும் சில மணி நேரங்களுக்கு மேல் நெரிசல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையிலிருந்து மட்டும் 2,265 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.