சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு : கனமழையால் போக்குவரத்து மாற்றம்
traffic
chennai
heavrain
By Irumporai
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது, கனமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
ரங்கராஜபுரம் இரண்டு சக்கர வாகன சுரங்கப் பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேட்லி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கேகே நகர் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு , இரண்டாவது அவின்யூவை நோக்கி வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது.
வளசரவாக்கம் மெகா மார்ட் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஆற்காடு ரோடு செல்ல கேசவர்தினி சாலை நோக்கி வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது.