ECR பக்கம் 2 நாள் போகாதீங்க..! அதிரடி போக்குவரத்து மாற்றங்கள்..!
சென்னை ECR சாலையில் இரண்டு நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியிருக்கின்றது.
கேலோ இந்தியா
தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டுக்கள் கடந்த 19-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்றது வருகின்றது. நாட்டின் பிரதமர் துவங்கி வைத்த இந்த போட்டிகள், தொடர்ந்து தமிழ்நாட்டின் சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த விளையாட்டிற்காக தற்போது சென்னையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரபூர்வ செய்தி குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், வரும் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் சென்னை ECR சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது குறித்து அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, கேலோ இந்தியா (Khelo India) விளையாட்டு போட்டிகள் 2024 தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
போக்குவரத்து மாற்றம்
அதன் ஒரு பகுதியாக ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டியானது கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான பகுதியில் நாளை (27.01.2024) மற்றும் நாளை மறுநாள் (28.01.2024) நடைபெற இருக்கிறது. எனவே, கிழக்கு கடற்கரை கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே. பொதுமக்கள் தங்கள் பயணத்திற்கு பூஞ்சேரி, திருப்போரூர்.கேளம்பாக்கம் (OMR) வழியாக பயன்படுத்தி கொள்ளவும்.

உச்ச கட்ட பதற்றம் : சற்று முன்னர் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு தலைமையகத்தை குண்டுவீசி தகர்த்தது இஸ்ரேல் IBC Tamil

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
