காணும் பொங்கல் Effect - சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Government of Tamil Nadu
By Karthick Jan 17, 2024 07:08 AM GMT
Report

சென்னையில் இன்று காணும் பொங்கலை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளதாகப் போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து மாற்றம்

தை பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் இன்று காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் காணும் பொங்கல் அன்று மக்கள் கோவில், சுற்றுலா தலங்களுக்குச் செல்வது வழக்கம்.

traffic-change-in-chennai-due-to-pongal-

இந்நிலையில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் போக்குவர்ததுக் காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

காமராஜர் சாலையில் பெரும்பாளான மக்கள் கூடுவாரகள் என எதிர்பார்கப்படுகிறது.இந்நிலையில் சூழ்நிலைக்கு எற்றவாறு கீழ்கண்ட மாற்றங்கள் செய்யப்பட் உள்ளன. காமராஜர் சாலையில் மக்கள் கூட்டம் அதிகமாகும் வரை எந்த மாற்றமும் இல்லை.

மெரினா கடற்கரைக்கு வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் அதிகரிக்கும் போது போர்நிலைவுச் சின்னத்தில் இருந்து வரும் வகனங்கள் வழக்கம் போல் கலங்கரை விள்க்கம் நோக்கி மாற்றப்படும்.

கலங்கரை விளக்கத்தில் இருந்து வரும் வாகனங்களை கண்ணகி சாலையில் இடதுபுறமாக கட்டாயமாக திருப்பப்பட்டு பாரதி சாலை பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை வழியாக செல்லலாம்.

traffic-change-in-chennai-due-to-pongal-

வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை, பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது(விக்டோரியா விடுதி சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்படும்)