சிறுவன் ஓட்டிய டிராக்டரால்செவிலியர் உயிரிழப்பு.. சீர்காழியில் சோகம்!
சீர்காழி அருகே குளத்திங்கநல்லூரில் டிராக்டர் மோதி செவிலியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வடகால் துணை சுகாதார நிலையத்தில் செவிலியராக பணி புரிபவர் உஷா.
இவர் இன்று குளத்திங்கநல்லூருக்கு பணி நிமித்தமாக மாதாந்திர தடுப்பூசி போடுவதற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்பொழுது அவருக்குப் பின்னே டிராக்டர் ஒன்று உஷா வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அவர் மீது ஏறி செவிலியர் உஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் டிராக்டரை 15 வயது சிறுவன் ஓட்டி வந்தது தெரியவந்துள்ளது.
செவிலியர் தினமான இன்று ஒரு செவிலியர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.