போடல தள்ளி...அதனால வந்தேன் துள்ளி - அடுக்குமொழியில் அரசுக்கு டி.ஆரின் கோரிக்கை
அடுக்குமொழியில் பேசி நடிகர் டி.ராஜேந்தர் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
மயிலாடுதுறையில் டி.ஆர்

ஆடி மாதத்தை முன்னிட்டு, நடிகர் டி.ராஜேந்தர் மயிலாடுதுறைக்கு சென்றுள்ளார். சென்ற ஆண்டு அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்ட பிறகு முதன் முறையாக மயிலாடுதுறையிலுள்ள மாயூரநாத கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார்.
மத்திய அரசுக்கு கோரிக்கை

மயிலாதுறை அடுத்த தரங்கம்பாடியில் கல்லூரி படிப்பை முடித்த டி.ராஜேந்தர், தற்போது தரங்கம்பாடியில் ரயில் போக்குவரத்து சேவை இல்லாத காரணத்தால், அதனை மீண்டும் துவங்கவேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் தனது வழக்கமான அடுக்குமொழியில் கோரிக்கை வைத்துள்ளார்.
சிம்பு தான் காரணம்

மேலும், தான் சென்ற ஆண்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதற்கு தனது மகன் சிம்பு தான் காரணம் என கூறிய டிஆர், அதன் காரணமாக சென்ற ஆண்டு ஆடி மாதத்தில் மயிலாடுதுறை வர இயலாமல் போனது என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil