நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் - டி.ஆர்.பாலு எம்.பி!

 அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி.டி.ஆர்.பாலு நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்.

பொருளாதார வீழ்ச்சி,விவசாய பிரச்சினை உள்ளிட்ட 13 பிரச்சினைகள் குறித்து அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என திமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா குறித்து விரிவாக பேச மத்திய அரசு தயாராக இல்லை என்ற சந்தேகம் எழுந்திருப்பதாக கூறினார்.

மேலும் அவர்,பெட்ரோல்,டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக திமுக எம்.பி.டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்