பிரபல இயக்குநர் டி.பி.கஜேந்திரனுக்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
பிரபல இயக்குநர் மற்றும் காமெடி நடிகர் டி.பி.கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் மத்திய,மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனிடையே தமிழகத்தில் முக்கிய நபர்கள் மற்றும் திரை பிரபலங்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில் இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு மூச்சுத்திணறல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கஜேந்திரன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.