பிரபல சுற்றுலா தளத்தில் இடிந்து விழுந்த பாலம் -ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 25 சுற்றுலா பயணிகள்
புனேவில் பாலம் இடிந்து விழுந்ததில் 25 சுற்றுலா பயணிகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் குந்த்மாலா பகுதி அங்குள்ள பிரபல சுற்றுலா தளமாகும். இங்கு மழைக்காலத்தில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று இந்திராயணி ஆற்றில் கட்டப்பட்டிருந்த பாலம் ஒன்றில் 20க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் நின்று கொண்டிருந்தனர்.
திடீரென பாலம் கீழே விழுந்ததில், பாலத்தில் இருந்த 25 பேர் ஆற்றில் விழுந்து அடித்து செல்லப்பட்டுள்ளனர். தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
महाराष्ट्र के पुणे में हुआ बहुत बड़ा हादसा, इंद्रायणी नदी पर बने पुल का आधा हिस्सा गिरा, पुल गिरने से 25-30 लोगों के डूबने की आशंका।#Maharashtra #IndrayaniRiver pic.twitter.com/dbrSanWQ0X
— Molitics (@moliticsindia) June 15, 2025
இதில், 6 பேர் மீட்கப்பட்டனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 6 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவிந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan
இந்த குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் ஒரு மில்லியன் டொலர் வெகுமதி: அமெரிக்கா அரசு அறிவிப்பு IBC Tamil