மேட்டுப்பாளையம் உதகை மலைப்பாதையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து..!
மேட்டுப்பாளையம் உதகை மலைப்பாதையில் பர்லியாறு என்ற இடத்தில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் இருந்து கடந்த இரு தினங்களுக்கு முன் உதகைக்கு 23பேர் கொண்ட கிருஸ்த்துவ மறைக்கல்வி ஆசிரியர்கள் சுற்றுலா வந்துள்ளனர்.
இரண்டு நாள் சுற்றுலா முடித்து விட்டு இன்று இரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்துள்ளனர் பயணிகள் வந்த டெம்போ ட்ரேவலர் வாகனத்தை சாஜூகுமார் என்பவர் ஓட்டி வந்தார்,
இந்த நிலையில் சுற்றுலா வாகனம் மேட்டுப்பாளையம் குன்னூர் மலைப்பாதையில் பர்லியாறு என்ற இடத்தில் வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 10 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்தானது ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 16 பேர் காயம் அடைந்தனர் காயமடைந்த சுற்றுலா பயணிகள் அணைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கபட்ட நிலையில் 9பேருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் 7பேருக்கு தலை உள்ளிட்ட பகுதியில் அதிக காயம் ஏற்பட்டது எனவே அவர்களை உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் விபத்தில் காயமடைந்த அனைவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.