டாஸ் வென்றது பெங்களூர் அணி - பேட்டிங் தேர்வு: ரசிகர்கள் ஆர்வம்
அபுதாபியில் நடைபெற்று கொண்டிருக்கும் போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. கொரோனா நோய் தொற்றினால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது.
அதனை தொடர்ந்து, இன்று நடைபெற்று கொண்டிருக்கும் 31வது ஆட்டத்தில் கொல்கத்தா – பெங்களூர் அணிகள் களத்தில் மல்லுக்கட்ட உள்ளன.
இந்த போட்டி ஷேக் சயீத் ஸ்டேடியமத்தில் நடைபெறவுள்ளது. இந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் பெங்களூர் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து உள்ளது. இரு அணிகளும் பலம் வாய்ந்தது என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.