வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ;சூனியம் செய்வதாகச் சந்தேகப்பட்டு..நாய் மலத்தைச் சாப்பிட வைத்த அவலம்!
சூனியம் செய்வதாகச் சந்தேகப்பட்டு மூதாட்டிக்கு இரும்புக் கம்பியால் அடித்து சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள ரெத்யகேடா கிராமத்தில் வசித்து வருபவர் 77 வயது மூதாட்டி. இவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த மாதம் ஜனவரி 5 ஆம் தேதி மகனும் மருமகளும் வெளியூருக்கு வேலைக்குச் சென்றுள்ளனர்.
இதனால் அந்த மூதாட்டி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.இதனையடுத்து மகனும் மருமகளும் வேலை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அப்போது மூதாட்டி வீட்டில் இல்லாததால் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.இதனிடையே, மூதாட்டியைப் பிடித்து கிராம மக்கள் தாக்கி சிறை பிடித்ததாகத் தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த காவல்துறையினர் பார்த்த போது காணாமல் போய் இருந்த மூதாட்டி என்பது தெரியவந்தது.
சூனியம்
அப்போது சூனியம் செய்வதாகச் சந்தேகப்பட்டு மூதாட்டியைப் பிடித்துச்சென்று கட்டைகளால் அடித்தும், அறைந்து துன்புறுத்தி உள்ளனர்.அதுமட்டுமில்லாமல் சூடான இரும்புக் கம்பிகளால் கைகளிலும் கால்களிலும் முத்திரை குத்தி கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து ஊர்வாக அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும் 77 வயது மூதாட்டியை சிறுநீரைக் குடிக்கவும், நாய் மலத்தைச் சாப்பிடவும் வற்புறுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்ற்னர்.