என்ன அழகு எத்தனை அழகு.. கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் டார்ச் லில்லி மலர்கள்!
kodaikanal
flowers
By Irumporai
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் டார்ச் லில்லி எனப்படும் மலர்கள் தற்போது பூத்துக்குலுங்குகிறது. இதனை " ரெட் ஹாட் போக்கர் " என்றும் அழைக்கப்படுகிறது,
இந்த வகையான மலர்கள் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. தற்போது பாம்பார்புரம், கீழ்பூமி, புதுகாடு ஆகிய பகுதிகளில் நீர்நிலைகளின் ஓரங்களில் கண்களை கவரும் வகையில் இந்த டார்ச் லில்லி மலர்கள் பூத்துள்ளது.
மேலும் இந்த மலர்களில் உள்ள தேனை பருகுவதற்காக மைனா கூட்டங்கள் அதிகளவில் படையெடுத்து வருகின்றன.
இந்த வகையான மலர்களை அனைவரும் கண்டுகளிக்கும் விதமாக பிரையண்ட் பூங்காவில் அதிகளவு நடவு செய்யவேண்டும் என சமூக ஆர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
