மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்; இந்தியா டாப் 50ல் கூட இல்லை - எத்தனையாவது இடம் தெரியுமா?
உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகள் குறித்த தகவல்கள் வெளியகியுள்ளது.
உலக மகிழ்ச்சி அறிக்கை
சுதந்திரம், சுகாதாரம், ஊழல் இல்லாமை, வருமானம், சமூக ஆதரவு, தாராள மனப்பான்மை ஆகிய 6 முக்கியமான அளவுகோல்களைக் கொண்டு ஐக்கிய அரபு நாடுகளின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் நெட்வர்க் (United Nations Sustainable Development Solutions Network) உலக மகிழ்ச்சி அறிக்கையை வெளியிட்டு வருகிறது.
[3OZTU ]
மொத்தமாக 136 நாடுகள் இந்த பட்டியலில் உள்ளனர். ஆண்டுதோறும் மார்ச் 20ம் தேதி சர்வதேச மகிழ்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
முதல் பத்து நாடுகள்
1. பின்லாந்து 2. டென்மார்க் 3. ஐஸ்லாந்து 4. இஸ்ரேல் 5. நெதர்லாந்து 6. ஸ்வீடன் 7. நார்வே 8. சுவிட்சர்லாந்து 9. லக்சம்பர்க் 10. நியூசிலாந்து ஆகிய இடங்களை பிடித்துள்ளது.
இந்தியா
இந்த வரிசையில் இந்தியா 126வது இடத்தில் உள்ளது. அண்டை நாடுகளான நேபாளம், சீனா, பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை விட இந்தியா பின் தங்கியுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளான உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளை விடவும் இந்தியா தரவரிசையில் கீழ் உள்ளது.
போர் போன்ற சூழ்நிலையில் இருந்தாலும் மகிழ்ச்சி,ஆரோக்கியம்,கருணை ஆகியவை போர் நடந்த இந்த நாடுகளில் பாதிக்கப்படவில்லை. மிகவும் மகிழ்ச்சியற்ற நாடு தாலிபான் ஆட்சி நடைபெற்றுவரும் ஆப்கானிஸ்தான் இந்த தரவரிசை பட்டியலில் கடைசியாக உள்ளது.
இதனால் மிகவும் மகிழ்ச்சியற்ற நாடு ஆப்கனிஸ்தான் என்று (United Nations Sustainable Development Solutions Network) அறிக்கை வெளியிட்டுள்ளது.