முடிந்தால் என்னைத் தடுத்துப் பார்க்கட்டும் : தமிழக அரசுக்கு சீமான் சவால்

Seeman
By Irumporai Feb 11, 2023 09:12 AM GMT
Report

சமூக ஆர்வலர்களையும் அடக்கி ஒடுக்கும் இந்த அரசு முடிந்தால் என்னைத் தடுத்துப் பார்க்கட்டும் என சீமான் தெரிவித்துள்ளார். 

சீமான் கருத்து

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்க்கு அந்த பகுதியை சுற்றியுள்ள 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று 200-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இவர்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக சென்ற பூவுலக நண்பர்கள் அமைப்பினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முடிந்தால் என்னைத் தடுத்துப் பார்க்கட்டும் : தமிழக அரசுக்கு சீமான் சவால் | Top Me If You Can Seaman

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத்தெரிவித்து 200வது நாளாக போராடி வரும் மண்ணின் மக்களுக்கு ஆதரவளிக்கச் சென்ற பூவுலக நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த தம்பி வெற்றி செல்வன் அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைதுசெய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

முடிந்தால் தடுத்து பார்

விவசாயநிலங்களையும், வாழ்விடங்களையும் பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கிற அத்திட்டத்தை எதிர்த்து இறுதிவரை அம்மக்களோடு நாம் தமிழர் கட்சி துணைநிற்கும், சனநாயகப் போராட்டம், சட்டப்போராட்டமென என எல்லாநிலையிலும் அத்திட்டத்திற்கு சமரசமின்றி களத்தில் நிற்போமெனவும் உறுதிகூறுகிறேன்.

போராட்டத்தின் தொடக்கநிலையிலேயே பரந்தூர் மக்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்ததுபோல, மீண்டும் அம்மக்களைச் சந்திக்க நானே நேரடியாகக் களத்திற்குச் செல்வேன். சூழலியல் அமைப்புகளையும், சமூக ஆர்வலர்களையும் அடக்கி ஒடுக்குவதுபோல, அப்போது முடிந்தால் என்னைத் தடுத்துப் பார்க்கட்டும் என பதிவிட்டுள்ளார்.