நிறைந்த நிசப்தம் - உலகின் மிக அமைதியான இடங்கள் எது தெரியுமா?
குண்டூசி போட்டா கூட சத்தம் கேட்கும் இடங்கள் பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க...
மைக்ரோசாப்ட் ஆய்வுக்கூடம்

வாஷிங்டனில் ரெட்மண்ட் நகரில் அமைந்துள்ளது மைக்ரோசாப்ட் ஆய்வுக்கூடம். கின்னஸ் உலக சாதனைகளின் படி, அதிகாரப்பூர்வமாக பூமியின் அமைதியான இடமாக அங்கீகரிக்கப்பட்டது. ஒலி மற்றும் மின்காந்த அலைகளின் அனைத்து பிரதிபலிப்புகளையும் உள்வாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆர்ஃபீல்ட் ஆய்வகம்

மினியாபோலிஸில் உள்ள ஆர்ஃபீல்ட் ஆய்வகம். இங்கு ஆண்டின் சில நாட்களுக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 20 நிமிடத்திற்கும் குறைவாகவே இங்கு இருக்க முடியுமாம். சத்தம் இல்லாமல் சித்ரவதை செய்வது போல் தோன்றுவதாக கூறப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் தேசியப் பூங்கா

வாஷிங்டன், ஒலிம்பிக் தேசியப் பூங்கா. 900,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டுள்ளது. , 3,000 மைல்களுக்கு மேல் ஆறுகள் மற்றும் நீரோடைகள், 60 பெயரிடப்பட்ட பனிப்பாறைகள் மற்றும் 1 தேசிய இயற்கை அடையாளம் உள்ளது.
கீல்டர் மியர்ஸ்

இங்கிலாந்து, நார்தம்பர்லேண்டின் கீல்டர் மியர்ஸ் எனப்படும் சதுப்பு நிலத்தின் மிகப்பெரிய பகுதி. சாலை அல்லது விமானப் பாதை ஏதும் இல்லாததால் அமைதி நிறைந்திருக்கும்.
ஐஸ்லாந்து

ஐஸ்லாந்து, பல எரிமலைத் திட்டுகள் உள்ளன. இயற்கையான வெந்நீர் ஊற்று , அழகான பள்ளத்தாக்கு என நிலமன்னலுகர் பகுதியும் மிகவும் அமைதியான இடமாகும்.
அண்டார்டிகா

சுத்தமான தண்ணீரைக் கொண்டுள்ள அண்டார்டிகா. 14 மில்லியன் கிமீ பரப்பளவைக் கொண்டது. கண்டம் முழுவதும் அமைதியில் சூழ்ந்துள்ளது.