சொத்து மதிப்பில் முதலிடத்தை பிடித்த அதிமுக வேட்பாளர் யார் தெரியுமா?

property candidate aiadmk isaki
By Jon Mar 17, 2021 01:45 PM GMT
Report

சட்டப்பேரவை தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் சொத்து மதிப்பில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா முதலிடம் பிடித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலையொட்டி திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவரது சொத்து பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இசக்கி சுப்பையாவின் சொத்து மதிப்புகள் இசக்கி சுப்பையாவின் பெயரில் அசையும் சொத்து ரூ.3.79 கோடி, மனைவி மீனாட்சி பெயரில் ரூ.3.06 கோடி என மொத்தம் அசையும் சொத்து மதிப்பு ரூ.6.86 கோடி இதுபோன்று அசையா சொத்துக்கள் தனது பெயரில் ரூ.208.96 கோடி அவரது மனைவி பெயரில் ரூ.30.93 கோடி மொத்தம் ரூ.239.9 கோடி உள்ளது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு கணக்குப்படி இசக்கி சுப்பையாவின் மொத்த சொத்துக்கள் ரூ.246.76 கோடி உள்ளன.

கடந்த 2011ம் ஆண்டு இசக்கி சுப்பையா தாக்கல் செய்யப்பட்ட மொத்த சொத்துக்கள் மதிப்பு ரூ.60.02 கோடியாக இருந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு 4 மடங்கு அதிகரித்துள்ளது. அதிக சொத்து வைத்துள்ள வேட்பாளர் பட்டியலில் அண்ணா நகர் திமுக வேட்பாளர் எம்கே மோகனை பின்னுக்குத்தள்ளி அதிமுக வேட்பாளராக இசக்கி சுப்பையா முதலிடம் பிடித்துள்ளார்.


Gallery