உலகின் சுத்தமான காற்றை கொண்ட நாடுகள் இதுதான் - இந்தியாவுக்கு எந்த இடம்?
உலகின் சுத்தமான காற்றை கொண்ட நாடுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சுத்தமான காற்று
உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு உணவு, காற்று, வாழ்விடம் இன்றியமையாததாக உள்ளது. குறிப்பாக சுத்தமான காற்று இல்லாமல், மனிதர்கள் உட்பட எந்த உயிரினமும் உயிர்வாழ முடியாது. சுத்தமான காற்று இல்லையெனில், பலவிதமான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும்.
சுத்தமான காற்று, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும், அதன் சமநிலையை நிலைநிறுத்துவதற்கும் அவசியமாகிறது. ஆனால் இன்றைய காலநிலை மாற்றத்ததால் காற்று மாசுப்படுவது அதிகரித்து வருகிறது. ஆனால் இதற்கு மாறாக சுத்தமான காற்றை கொண்ட நாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நாடுகள்
அதன் பட்டியல் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. சுத்தமான காற்றை கொண்ட நாடுகள் பட்டியலில் எஸ்டோனியா - 127 உள்ளது. 2வது இடத்தில் ஆஸ்திரேலியாவும், 3வது இடத்தில் நியூசிலாந்து, 4 வது இடத்தில் ஐஸ்லாந்து, 5 வது இடத்தில் கிரெனடா மற்றும் 6 வது இடத்தில் பார்படோஸ், 7 வது இடத்தில் பகாமாஸ் உள்ளது.
மேலும் QAir-இன் 2024 உலக காற்றுத் தர அறிக்கையின்படி, சாட், காங்கோ, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானை தொடர்ந்து உலகின் ஐந்தாவது மிகவும் மாசுபட்ட நாடாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.