தென்னிந்தியாவில் சிறந்த பிரபலம் - விஜய், பிரபாஸை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்தார் சூர்யா..!

Suriya Viral Photos
By Nandhini Jan 17, 2023 12:21 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக நடிகர் சூர்யா வலம் வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

சிறந்த பிரபலமாக முதலிடம் பிடித்தார் சூர்யா

இந்நிலையில், சமீபத்தில் இந்திய மனித பிராண்டுகள் நிறுவனம் (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் பிராண்ட்ஸ்) நடத்திய கருத்து கணிப்பில் இந்தியாவின் தென்னிந்தியா முழுவதும் நம்பர் 1 பிரபலமாக சூர்யா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

விஜய், பிரபாஸ், ராம் சரண் போன்ற பிரபலங்களைப் பின்னுக்குத் தள்ளி சிறந்த தென்னிந்தியப் பிரபலமாக சூர்யா முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். இந்த ஆய்வு தென்னிந்தியாவில் பிரத்தியேகமாக நடத்தப்படுவது இதுவே முதல் முறை.

இந்த ஆய்வில் நம்பிக்கை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் அல்லு அர்ஜுன் மற்றும் விஜய் தேவரகொண்டா முன்னிலை வகித்தனர். தமிழில் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் முன்னணியில் இருக்கிறார்கள்.   

top-actor-from-south-suriya-no-1