தமிழ்நாட்டின் டாப் 5 பணக்கார மாவட்டங்கள் எது தெரியுமா ?

Kanchipuram Chennai Chengalpattu Namakkal Tiruppur
By Sakthi Raj Feb 18, 2026 12:00 PM GMT
Report

  ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருக்கிறது. அதன் அடிப்படையில் எந்த மாவட்டம் அதிக அளவிலான பொருளாதாரத்தை ஈட்டுகிற மாவட்டம் என்ற ஒரு கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் உள்ள டாப் 5 பணக்கார மாவட்டங்களை பற்றி பார்ப்போம்.

1. திருப்பூர்:

தமிழ்நாட்டின் பணக்கார மாவட்ட பட்டியல்களில் திருப்பூர் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. திருப்பூர் அதிகமான உடைகளை ஏற்றுமதி செய்யும் மாவட்டங்களாக இருப்பதால் அந்த மாவட்டத்தில் பெரும்பாலான மக்களின் சராசரி வருமானம் ரூபாய் 4.37 லட்சமாக இருக்கிறது.

தமிழ்நாட்டின் டாப் 5 பணக்கார மாவட்டங்கள் எது தெரியுமா ? | Top 5 Richest Districts In Tamilnadu

2. நாமக்கல்:

நாமக்கல் தமிழ்நாட்டின் பணக்கார மாவட்டங்களில் நான்காவது இடத்தில் இருக்கிறது. மேலும் நாமக்கல் மாவட்டம் கோழி வளர்ப்பதற்கு பிரபலமாக விளங்குகிறது. அதனால் அங்கு முட்டை வணிகம் சிறந்து விளங்குவதோடு இந்த மாவட்டத்தில் பெரும்பாலான மக்களின் சராசரி வருமானம் 4.75 லட்சமாக இருக்கிறது.

3. சென்னை:

தமிழ்நாட்டின் தலைநகரமாக இருக்கக்கூடிய சென்னை தமிழ்நாட்டின் பணக்கார பட்டியலில் மூன்றாவது இடத்தை தான் பிடித்திருக்கிறது. மேலும் சென்னை தமிழ்நாட்டின் ஐ டி ஹப்பாக திகழ்வதோடு இங்கு வசிக்கக்கூடிய பெரும்பாலான மக்களின் வருமானம் ரூபாய் 5.77 லட்சமாக இருக்கிறது.

தமிழ்நாட்டின் டாப் 5 பணக்கார மாவட்டங்கள் எது தெரியுமா ? | Top 5 Richest Districts In Tamilnadu

4. காஞ்சிபுரம்:

தமிழ்நாட்டின் பணக்கார மாவட்டங்களில் காஞ்சிபுரம் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. காஞ்சிபுரம் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது பட்டு தான். மேலும் பட்டுத்துறையில் கோடி கணக்கான வருமானத்தை இந்த மாவட்டம் ஈட்டி வருகிறது. இந்த மாவட்டத்தில் பெரும்பாலான மக்களின் சராசரி வருமானம் ரூபாய் 7.39 லட்சமாக இருக்கிறது.

5. செங்கல்பட்டு:

தமிழ்நாட்டின் பணக்கார மாவட்டங்களில் முதல் இடத்தை செங்கல்பட்டு பிடித்திருக்கிறது. இந்த மாவட்டத்தில் ஐடி துறை, எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் வாகன உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது. இந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்களின் சராசரி வருமானம் 7.47 லட்சமாக இருக்கிறது. மேலும் இந்த மாவட்டங்களை எல்லாம் தொடர்ந்து கோவை, சேலம், தூத்துக்குடி, மதுரை போன்ற மாவட்டங்கள் அடுத்தடுத்த இடத்தை பிடித்திருக்கிறது. 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.