2021ம் ஆண்டில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 வீரர்கள் - ஒரு இந்திய வீரர் கூட இல்லையாம்!
கொரோனா அச்சத்தின் காரணமாக கடந்த ஆண்டு கிரிக்கெட் போட்டி அவ்வளவாக எதுவும் நடக்கவில்லை இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் வருத்தத்தில் இருந்தனர்.
ஆனால் 2021 ஆண்டு முதல் கிரிக்கெட் தொடர் உலகமெங்கும் மிக சிறப்பான முறையில் நடந்து வருகிறது. இந்நிலையில் 2021 கிரிக்கெட் போட்டியில் மூன்று விதமான தொடர்களிலும் அதிகமான ரன்களை குவித்த 5 வீரர்களை பற்றி இங்கு காண உள்ளோம்.
பங்களாதேஷ் அணியின் இடதுகை பேட்ஸ்மேன் தமீம் இக்பால் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் அதிகமான ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.
இவர் மூன்று விதமான சர்வதேச தொடர்களிலும் பங்கேற்று 20 போட்டிகளில் 847 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார் அதில் ஒரு சதமும் 8 அரை சதங்களும் அடங்கும்.
மேலும் பங்களாதேஷ் அணியின் டெஸ்ட் தொடரின் துவக்க வீரராக களமிறங்கிய தமிம் இக்பால் 8 போட்டிகளில் பங்கேற்று 383 ரன்கள் அடித்துள்ளார் மேலும் 12 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 464 ரன்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது