இந்த நாடுகளில் கொடூரமான முறையில் மரண தண்டனை - எப்படி தெரியுமா?
கொடூரமான முறையில் மரண தண்டனை வழங்கும் நாடுகள் குறித்து பார்ப்போம்.
மரண தண்டனை
மரண தண்டனையை சில நாடுகள் கடுமையாக பின்பற்றி வருகின்றன. சில நாடுகளில் வாழ்நாள் முழுவதும் சிறை விதிப்பது அதிகபட்ச தண்டனையாக உள்ளது.
இதில் முதலிடத்தில் சீனா உள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு துப்பாக்கி மூலம் சுடுதல் அல்லது விஷ ஊசிகளை செலுத்தி கொல்லுதல் போன்றவை செய்யப்படுகின்றன.
ஈரானில் தூக்கிடுவதன் மூலம் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன. சில சமயங்களில் பொது இடங்களில் வைத்து இந்த தண்டனைகள் நிறைவேற்றப்படும்.
சவூதி அரேபியாவில் தலையை துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றும் வழக்கம் உள்ளது. 2020 இல் இங்கு 27 பேருக்கு இத்தகைய தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வடகொரியாவில் மரண தண்டனைகள் பொது இடங்களில் நிறைவேற்றப்படுகின்றன. இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாது.
ஈராக்கில் கார்களை கடத்துதல், ஆவணங்களை திருடுதல் போன்ற குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டும்.