இந்த 5 நாடுகளில் மக்கள் நீண்ட ஆயுளோடு வாழ்கிறார்கள்; சராசரி வயதே 80 - என்ன காரணம்..?

By Jiyath Jan 07, 2024 06:08 AM GMT
Report

மக்கள் நீண்ட ஆயுளோடு வாழும் 5 நாடுகள் குறித்த தகவல் 

நீண்ட ஆயுள்

நீண்ட ஆயுளோடு மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்ற ஆசை உலகில் வாழும் அனைவரிடமும் இருக்கிறது. ஒரு காலத்தில் ஒரு மனிதனை சராசரி இறப்பு வயது என்பது 60 ஆக இருந்தது.

ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பல்வேறு நோய்கள், சுற்றுச்சூழல், உணவு வகைகள் போன்றவற்றால் மனிதர்கள் 30 வயதை கடப்பதே பெரும் போராட்டமாக உள்ளது. சிறுவயதிலேயே பலரும் மாரடைப்பால் இறந்து விடுகிறார்கள். ஆனால் சில நாடுகளில் பலர் 100ஆண்டுகள் வாழ்கிறார்கள்.

சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபை, அதிக ஆயுட்காலம் உள்ள நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் எந்தெந்த நாடுகள் இடம்பெற்றிருக்கிறது என்பதை பார்ப்போம்.

மொனாக்கோ

இந்த நாட்டில் வாழும் மக்களின் சராசரி வயது 87.01 ஆண்டுகள். இங்குள்ள மக்கள் இயற்கைக்கு மிகவும் நெருக்கமானவர்கள். மேலும், மூத்த குடிமக்களுக்கான சுகாதார வசதிகள் மிக அதிகம். எனவே ஓய்வுக்குப் பிறகு தங்குவதற்கு இது சிறந்த இடங்களில் ஒன்றாகும்.

ஹாங்காங்

இந்த நாட்டில் வாழும் மக்களின் சராசரி வயது 85.83 ஆண்டுகள். இங்குள்ள புவியியல் புயல்கள், கடும் குளிர், அதிக வெப்பம் போன்ற பல தீவிர வானிலை நிகழ்வுகளைத் தடுப்பதால் நோய்கள் குறைகின்றன. பொருளாதார ரீதியாக மிகவும் பணக்கார நாடான இங்கு மூத்த குடிமக்களுக்காக பல்வேறு திட்டங்கள் உள்ளன.

மக்காவ்

இந்த நாட்டில் வாழும் மக்களின் சராசரி வயது 85.51 ஆண்டுகள். இங்கு 1.4 சதவீதம் மட்டுமே விபத்துகளில் உயிரிழப்பு நிகழ்கிறது. சூரிய உதயத்திற்கு முன் எழுவதும், சூரிய அஸ்தமனத்திற்கு பின் தூங்குவதும் இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை. மேலும், இங்கு முதியோர்களுக்கு இலவச மருத்துவம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு அனைத்து வகையான மானியங்களும் கிடைக்கும்.

ஜப்பான்

இந்த நாட்டில் வாழும் மக்களின் சராசரி வயது 84.95 ஆண்டுகள். இயற்கைக்கு மிகவும் நெருக்கமான ஜப்பானியர்களின் பலர் நின்று கொண்டு வேலை செய்கிறார்கள். நோய்களை எதிர்த்துப் போராடுவதைத் தவிர, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் வயதானதைத் தடுக்க ஒரு நாளைக்கு பல முறை தேநீர் குடிக்க வேண்டும். காலை உடற்பயிற்சி என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகும்.

லிச்சென்ஸ்டீன்

இந்த நாட்டில் வாழும் மக்களின் சராசரி வயது 84.77 ஆண்டுகள். மிகக் குறைந்த வரிகள், எளிமையான அமைப்புகள், கடுமையான வங்கிச் சட்டங்கள் போன்ற காரணங்களால், உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு பணத்தை டெபாசிட் செய்கிறார்கள். இங்கு வசிக்கும் மக்களுக்கு பல வகையான வசதிகள் உள்ளன. வீட்டில் அனைத்து வசதிகளும் உள்ளன. ஓய்வுக்குப் பிறகு வாழ்வதற்கு ஏற்ற இடங்களில் இதுவும் ஒன்று.