தமிழகத்தின் டாப் 3 பணக்கார வேட்பாளர்கள்

Vijay Aadhav Arjuna
By Fathima Apr 08, 2026 03:14 AM GMT
Report

 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிக சொத்து மதிப்பு கொண்ட வேட்பாளர்கள் யார் என்ற விபரங்கள் வெளியாகியுள்ளது.

முதலிடம்

முதலிடத்தில் இருப்பவர் அதிமுக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிடும் லீமா ரோஸ் மார்ட்டின், இவர் தான் அதிக சொத்து கொண்ட பணக்கார வேட்பாளராக அறியப்படுகிறார்.

அசையும், அசையா சொத்துக்களாக ரூ.1048 கோடி இருப்பதாகவும், கணவர் லாட்டரி அதிபர் மார்ட்டின் பெயரில் ரூ.4149 கோடி சொத்து மதிப்பும், மகன் ஜோஸ் மார்ட்டின் பெயரில் ரூ.662 கோடி சொத்து மதிப்பும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் டாப் 3 பணக்கார வேட்பாளர்கள் | Top 3 Wealthy Candidate In Tn Election

2வது இடம்

தமிழக வெற்றிகழகத்தின் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார், இவரிடம் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மொத்தமாக 624 கோடி ரூபாய் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் டாப் 3 பணக்கார வேட்பாளர்கள் | Top 3 Wealthy Candidate In Tn Election

3வது இடம்

அடுத்த இடத்தில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனா உள்ளார். அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.180 கோடி என்றும் அசையா சொத்தாக தனது பெயரில் ரூ.17.49 கோடி என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இதுதவிர தான் ரூ.155 கோடி வரை கடன் கொடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் டாப் 3 பணக்கார வேட்பாளர்கள் | Top 3 Wealthy Candidate In Tn Election