உலகில் அதிக வழுக்கை தலை ஆண்கள் உள்ள முதல் 25 நாடுகள் இதுதான் - அப்போ இந்தியா?

India World
By Jiyath Sep 19, 2023 07:21 AM GMT
Report

உலகில் அதிக வழுக்கை தலை ஆண்கள் உள்ள முதல் 25 நாடுகள் பற்றிய புள்ளிவிவர பட்டியல். 

வழுக்கை தலை

முடி உதிர்வு பிரச்சனை என்பதும், உதிர்ந்து விட்ட பின்பு வழுக்கை என்ற பிரச்சனையும் மக்களை அதிகமாக பாதிக்கிறது. வழுக்கை பிரச்சனையால் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. இதனால் தன்னம்பிக்கை இழப்பு, திருமண வாழ்க்கை உள்ளிட்டவை மக்களை பெரிதும் பாதிக்கிறது.

உலகில் அதிக வழுக்கை தலை ஆண்கள் உள்ள முதல் 25 நாடுகள் இதுதான் - அப்போ இந்தியா? | Top 25 Bald Males Countires In The World

இதனால் மனிதர்கள் கவலைக்கும் ஆளாகின்றனர். உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இந்த பிரச்சனை உள்ளது. அந்தவகையில் பொருளாதாரம், அறிவியல் & கல்வி, பயணம், கலை, தொழில்நுட்பம், மக்கள்தொகை உள்ளிட்டவை குறித்து உலக புள்ளிவிவரங்கள் பற்றிய தகவல்களை தரும் குளோபல் இண்டெக்ஸ் (Global Index) என்ற ட்விட்டர் தளம், உலகில் அதிக வழுக்கை தலைகளை கொண்ட ஆண்கள் உள்ள நாடுகளின் புள்ளிவிவர பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் 25 இடங்களை பிடித்திருக்கும் நாடுகள் பின்வருமாறு.

புள்ளிவிவர பட்டியல்

இதில் முதல் இடத்தில் இருப்பது ஐரோப்பிய கண்டத்தில் உள்ள செக்கியா என்றார் நாடு. இங்கு 42.8 % ஆண்கள் வழுக்கையாக உள்ளார்களாம். அடுத்த இடங்களில் இருப்பது "ஸ்பெயின்: 42.6%, ஜெர்மனி: 41.2%, பிரான்ஸ்: 39.2%, UK: 39.2%, இத்தாலி: 39.2%, நெதர்லாந்து: 38.9%, போலந்து: 38.8%, அமெரிக்கா: 37.9%, கனடா: 36.3%, பெல்ஜியம்: 36%, சுவிட்சர்லாந்து: 33.8%,

உலகில் அதிக வழுக்கை தலை ஆண்கள் உள்ள முதல் 25 நாடுகள் இதுதான் - அப்போ இந்தியா? | Top 25 Bald Males Countires In The World

ரஷ்யா: 33.3%, ஆஸ்திரேலியா: 32.8%, ஸ்வீடன்: 32.7%, கிரீஸ்: 31.9%, நார்வே: 31.8%, ஆஸ்திரியா: 31.7%, டென்மார்க்: 31%, போர்ச்சுகல்: 31%, அயர்லாந்து: 30.2%, பின்லாந்து: 30%, நியூசிலாந்து: 28.9%, மெக்சிகோ: 28.3% சதவீதங்களுடன் இருக்கிறது. மேலும் இந்த பட்டியலில் கடைசி 25வது இடத்தை பிடித்திருப்பது ஜப்பான்: 26.8%.

உலகில் அதிக வழுக்கை தலை ஆண்கள் உள்ள முதல் 25 நாடுகள் இதுதான் - அப்போ இந்தியா? | Top 25 Bald Males Countires In The World

ஆனால் இந்த பட்டியலில் இந்தியா இல்லாதது நெட்டிசன்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய இணையவாசிகள் பலரும் இந்த பதிவிற்கு கீழ் "கொஞ்சம் இந்தியா வந்து பாருங்கள், எங்கே இத்தியா? என்றும் நல்லது..பட்டியலில் இந்தியா இல்லை என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.