உலகில் இறைச்சியை அதிகம் சாப்பிடும் டாப் 10 நாடுகள் - இந்தியாவும் இருக்கா? லிஸ்ட் இதோ!

Healthy Food Recipes India World
By Vidhya Senthil Mar 15, 2025 11:30 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

உலகில் இறைச்சியை அதிகம் சாப்பிடும் டாப் 10 நாடுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இறைச்சி

உலகிலுள்ள ஒவ்வொரு நாடுகளுக்கு வெவ்வேறு விதமான உணவு வகைகள் உள்ளன. ஒருவருக்குப் பிடித்த உணவு இன்னொருவருக்குப் பிடிக்காது.அது போலச் சிலர் சைவம் மட்டுமே சாப்பிடுகின்றனர்.

உலகில் இறைச்சியை அதிகம் சாப்பிடும் டாப் 10 நாடுகள் - இந்தியாவும் இருக்கா? லிஸ்ட் இதோ! | Top 20 Non Veg Meat Consuming Countries In World

பலர் அசைவம் என இரு வகை உணவுகளையும் சாப்பிடுகின்றனர்.அதன்படி, உலகில் இறைச்சியை அதிகம் சாப்பிடும் நாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

 டாப் 10 நாடுகள்

  • ஐரோப்பிய நாடான லிதுவேனியா முதல் இடம் பிடித்துள்ளது. இங்கு 96 சதவீதம் பேர் பன்றி, மாடு, மற்றும் கோழி இறைச்சிகளை உணவாக சாப்பிடுகின்றனர். 
  • 2வதுஜப்பான் நாட்டில் 95% பேர் மீன் மற்றும் கடல் உணவு பொருட்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
  • 3வது இடத்தில் அர்ஜென்டினா உள்ளது. இங்கு 94% பேர் மாட்டிறைச்சி இறைச்சிகளை உணவாக சாப்பிடுகின்றனர்.
  •   4வது கிரீஸ் நாட்டினரில் 94% பேர் ஆடு மற்றும் மாட்டிறைச்சிகளை விரும்பி சாப்பிடுக்கின்றனர்.

உலகில் இறைச்சியை அதிகம் சாப்பிடும் டாப் 10 நாடுகள் - இந்தியாவும் இருக்கா? லிஸ்ட் இதோ! | Top 20 Non Veg Meat Consuming Countries In World

  • 5வது இடத்தில் ஹங்கேரி உள்ளது. இங்கு 94 சதவீதம் பேர் பன்றி மற்றும் மாட்டிறைச்சி இறைச்சிகளை உணவாக சாப்பிடுகின்றனர்.
  •  தொடர்ந்து பட்டியலில் 6வது இடத்தில் நார்வே உள்ளது. இங்கு 94 சதவீதம்பேர் மாடு மற்றும் ஆட்டிறைச்சி அதிகம் சாப்பிடுகின்றனர்.
  • 7 வது இடம் பிடித்த ருமேனியாவில் 94 சதவீதம் பேரும், கொலம்பியாவில்93% பேரும் ,போர்ச்சுகலில் 93 சதவீதம் பேரும் உள்ளனர்.
  •    இந்த பட்டியலில் செக் குடியரசு நாட்டில் 93% பேர் பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் கோழி ஆகியவை அதிகம் சாப்பிடுகின்றனர்.