உலகில் வாழத் தகுந்த நகரங்களின் பட்டியல் - சென்னை உட்பட இந்திய நகரங்கள் எந்த இடம் தெரியுமா?

Chennai India World
By Jiyath Aug 15, 2023 10:02 AM GMT
Report

உலகில் வாழத் தகுந்த நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

வாழ தகுந்த நகரம்

என்ற பொருளாதார புலனாய்வு அமைப்பு உலகம் முழுவதும் மொத்தம் 173 நகரங்களில் மக்களின் வாழ்க்கை நிலைமையை ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் 2023ம் ஆண்டில் உலகில் வாழாத தகுதியான நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

உலகில் வாழத் தகுந்த நகரங்களின் பட்டியல் - சென்னை உட்பட இந்திய நகரங்கள் எந்த இடம் தெரியுமா? | Top 20 Livable Cities In The World I

நகரத்தில் உள்கட்டமைப்பு வசதி, கலாச்சாரம், சுற்றுச் சூழல், சுகாதாரம், கல்வி உட்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் பட்டியல் மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகில் உள்ள நாடுகளில் உள்ள பல்வேறு நகரங்கள் எதிர்பாராத விதமாக ஏற்ற இரக்கம் கண்டது.கொரோனா காலகட்டம் முடிந்த தற்போதைய காலகட்டமாக இந்த ஆண்டும் தரவரிசையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்திய நகரங்கள்?

இதில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நகரங்களில் 8 நகரங்கள் அதிகமாக முன்னேறியுள்ளது. நியூசிலாந்தின் வெலிங்டன் 35 இடங்கள் முன்னேறி 23வது இடத்தையும், ஆக்லாந்து 25 இடங்கள் முன்னேறி 10 இடத்தையும் பிடித்துள்ளது.

உலகில் வாழத் தகுந்த நகரங்களின் பட்டியல் - சென்னை உட்பட இந்திய நகரங்கள் எந்த இடம் தெரியுமா? | Top 20 Livable Cities In The World I

வியட்னாம் நாட்டின் ஹனோய் 20 இடங்கள் முன்னேறி 129வது இடத்தையும், மலேசியாவின் கோலாலம்பூர் 19 இடங்களும் முன்னேறியுள்ளது. இதில் இந்திய நகரங்களான சென்னை, மும்பை,புது டெல்லி மற்றும் பெங்களூர் ஆகியவை தரவரிசையில் 45 மற்றும் 50க்கு இடையே உள்ளது.

மிக்க குறைந்த புள்ளிகளை பெற்ற நகரங்களின் அடிப்படையில், டமாஸ்கஸ் 30.7 புள்ளிகளை பெற்று 173வது இடத்தையும், திரிபோலி 40.1 புள்ளிகளை பெற்று 172வது இடத்திலும் உள்ளது.