நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியல் - தமிழக நகரம் ஒன்று கூட இல்லை..
தூய்மையான நகரங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
தூய்மை நகரங்கள்
ஒவ்வொரு ஆண்டும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் நமது நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.
446 நகரங்களை பல்வேறு தரநிலைகளில் ஆய்வு செய்து பட்டியல் வெளியாகும். அந்த வகையில், இந்த ஆண்டு தூய்மையான நகரமாக இந்தூர் மற்றும் சூரத் ஆகியவை முதலிடம் பெற்று தேர்வாகியுள்ளது. தொடர்ந்து நவி மும்பை 3வது இடத்தில் உள்ளது.
திருச்சி, சென்னை
மேலும், சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களுக்கு 'ஸ்வச் சர்வேக்ஷன் விருதுகள் 2023' வழங்கப்பட்டது. அதில் மகாராஷ்டிரா முதலிடத்தையும், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பரிசுகளை வழங்கினார்.
இதில், முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த எந்தவொரு நகரமும் வரவில்லை. திருச்சி மட்டும் பட்டியலில் 112ஆவது இடத்தை பிடித்துள்ளது. 1 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகையை கொண்ட நகரங்கள் பிரிவில் இந்த இடத்தை பெற்றுள்ளது.
மாநிலத்தின் தலைநகர் சென்னை இந்த லிஸ்டில் 199ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. மாநில அளவில் இது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.