பாதுகாப்பான நாடுகள் பட்டியல் - இந்தியாவுக்கு எந்த இடம் பாருங்க!
உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பான நாடு
உலக அமைதி குறியீடு 2025 ஆண்டுக்கான உலகின் பாதுகாப்பான நாட்கள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. இதில் 163 நாடுகள் இடம்பெற்று உள்ளன.
உலகின் பாதுக்காப்பான நாடுகள் பட்டியலில் ஐஸ்லாந்து முதல் இடத்தில் உள்ளது. இங்கு குறைந்தபட்ச குற்றங்கள், இராணுவ மோதல்கள் நடைப்பெறுகிறது.
இந்தியா?
அயர்லாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒருகாலத்தில் உள்நாட்டு மோதல்களால் பாதிக்கப்பட்டிருந்தது.
நியூசிலாந்து, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், போர்ச்சுகல், டென்மார்க், ஸ்லோவேனியா மற்றும் பின்லாந்து ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
முதல் 10 இடங்களில் இடம்பிடித்த ஒரே ஆசிய நாடு சிங்கப்பூர். இந்தியா இந்த பட்டியலில் 115வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 144வது இடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் ரஷ்யா இடம்பெற்றுள்ளது.