ஐபிஎல் ஏலத்தின் முதல் நாளில் அதிக தொகைக்கு விலை போன டாப் -10 வீரர்கள் இவர்கள் தான்...!
iplauction2022
top10players
ipltop10players
By Petchi Avudaiappan
ஐபிஎல் ஏலத்தின் முதல் நாளில் அதிக தொகைக்கு விலை போன டாப் -10 வீரர்களின் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மார்ச் மாதம் ஐபிஎல் தொடரை தொடங்க பிசிசிஐ தயாராகி வரும் நிலையில் இந்தாண்டு புதிதாக லக்னோ, அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளதால் வீரர்களுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதற்காக 590 வீரர்கள் அடங்கிய இறுதிப்பட்டியல் வெளியாகியிருந்தது.
முதல் நாளில் முன்னணி வீரர்கள் பலரும் ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் சில வீரர்களுக்கான ஏலத்தொகை எதிர்பார்த்ததை விட பல மடங்கு உயர்ந்தது. அதன்படி நேற்றைய தினம் இரவு வரை நடந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்குப் போன டாப்10 வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
- இஷான் கிஷன்( மும்பை இந்தியன்ஸ்) - ரூ.15.25 கோடி
- தீபக் சாஹர் ( சென்னை சூப்பர் கிங்ஸ்) - ரூ. 14 கோடி
- ஸ்ரேயாஸ் ஐயர் (கொல்கத்த நைட் ரைடர்ஸ்) - ரூ. 12.25 கோடி
- நிக்கோலஸ் பூரன் ( ஹைதராபாத்) - ரூ.10.75 கோடி
- வனிந்து ஹசரங்கா ( பெங்களூர்) - ரூ.10.75 கோடி
- ஹர்ஷல் படேல் ( பெங்களூர்) - ரூ.10.75 கோடி
- ஷர்துல் தாகூர் (டெல்லி) - ரூ.10.75 கோடி
- பிரஷித் கிருஷ்ணா (ராஜஸ்தான்) - ரூ.10 கோடி
- லோகி பெர்குஷன் (குஜராத்) - ரூ.10 கோடி
- ஆவேஷ் கான் ( லக்னோ) - ரூ.10 கோடி